Thursday, February 26, 2009

The Details for Tiruchirapalli

Tiruchirappalli (தி௫ச்சிராப்பள்ளி):


Tamil Nadu's Fourth largest City after Chennai, Madurai, Coimbatore with an estimated population of 1,067,915 (as of 2008).It is situated in the centre of the state, on the banks of the Cauvery River. Trichy is a Municipal Corporation and the administrative headquarters of Tiruchirapalli District.

The most famous landmark of Trichy is the Rock fort temple which is perched on a huge rocky out crop. The smooth crop was first hewn by the Pallavas but it was the Nayaks of Madurai who later built the Rock fort temple. The temple is dedicated to Lord Shiva and Lord Ganesha.

திருச்சிராப்பள்ளி (ஆங்கிலம்:Tiruchirappalli), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகராட்சி ஆகும்.
திருச்சிராப்பள்ளி தமிழகத்தில் உள்ள 4 முக்கியமான நகரங்களில் ஒன்றாகும். திருச்சிராப்பள்ளி காவேரி நதிக் கரையில் அமைந்துள்ளது. பொதுவாக திருச்சிராப்பள்ளியை, திருச்சி என்று அழைப்பார்கள்.
திருச்சிராப்பள்ளி என்பதன் பொருளானது, திரு - சிராய் (சிராய் என்பது பாறை என்று பொருள்படும்) - பள்ளி, அதாவது சிராய் பள்ளி கொண்ட இடம். பிரசித்தி பெற்ற மலைக் கோட்டை இந்த பாறையின் மேலேயே அமைந்து உள்ளது.
தமிழகத்தின் மையப்பகுதியில் இருப்பதால் இது ஒரு வர்த்தக மையமாகவும் திகழ்கிறது.

பெயர்க் காரணம் :
திரிசிரன் என்னும் அரக்கன் மூன்று சிரங்களைக் கொண்டவன். அவ்வரக்கன் இவ்வூரில் பூசித்ததனால் திருச்சிராப்பள்ளி என்னும் பெயர் ஏற்பட்டது. இது தென்னாட்டு கைலை மலை என்றும் புகழப்படுவது. திருச்சி மலைக்கோட்டையில் காணப்படும் குகையில் சிரா என்னும் சமணத் துறவி தங்கியிருந்து தவமிருந்ததாக அக்குகையில் உள்ள பதினோராம் நூற்றாண்டுக் கல்வெட்டு கூறுகிறது. சிரா துறவியின் பள்ளி சிராப்பள்ளி என்றாகி அதுவே இவ்வூருக்கு பெயராகி உள்ளது என்றும் கருதப்படுகிறது.

வரலாறு :
தென்னகத்தின் மத்தியில் திருச்சி மாவட்டம் அமைந்துள்ள காரணத்தால், தென்னகத்தின் மீது படையெடுத்து வெற்றி கொண்ட அத்தனைப் பேரரசுகளின் ஆதிக்கத்திலும் பரந்தும் குறுகியும் இம்மாவட்டம் விளங்கியது. சேர, சோழ, பாண்டியர்களாலும், விஜய நகரப் பேரரசாலும் பாளையக்காரர்களாலும் திருச்சி மாவட்டம் ஆளப்பட்டது. ஆங்கிலேயர்களின் நிலையான ஆட்சி அமைந்த பிறகே, இம்மாவட்டத்தில் அமைதியும் வளர்ச்சியும் ஏற்படத் தொடங்கின. 1948-இல் புதுக்கோட்டை சமஸ்தானம் திருச்சி மாவட்டத்தில் இருந்தது. இப்பகுதி 1974-இல் திருச்சியிலிருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக அமைந்தது. நில அடிப்படையில் தமிழகத்தின் மையமாக விளங்கும் திருச்சி மாவட்டம் 1995, செப்டம்பர் 30-ஆம் தேதி திருச்சி, கரூர், பெரம்பலூர் என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது.

Tuesday, February 24, 2009

The Details for madurai

MADURAI(மதுரை)


Madurai was the capital city of ancient southern civilization. Madurai's cultural heritage goes back 2,500 years, and the city has been an important commercial center and has conducted trade as far as Rome and Greece since as early as 550 B.C.E

மதுரை (ஆங்கிலம்:Madurai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டத்தின் தலைநகராக இருக்கும்.
மதுரை நகரம் 2500 ஆண்டுகள் பழமையானது.

வரலாறு
தென்னிந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க முக்கிய இடம் மதுரைக்கு உண்டு. முற்கால மற்றும் பிற்கால பாண்டியர்கள், சுல்தான்கள், நாயக்கர்கள் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பல சாதனைகளையும் சோதனைகளையும் தாண்டி வந்தது இம்மதுரை நகரம். பராசக்தியின் வடிவமான அன்னை மீனாட்சி பிறந்து, வளர்ந்து, ஆட்சிசெய்து, தெய்வமான இடமாகக் கருதப்படும் மதுரை, இந்து சமயத்தைச் சேர்ந்தவர்களின் மிக முக்கிய சக்திஸ்தலமாக விளங்குகிறது. இக்கோயிலில் நடக்கும் திருவிழாக்கள் சமுதாய ஒருங்கிணைப்பிற்கு ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமன்றி, அன்றைய மன்னராட்சியின் ஆட்சிச் சிறப்பையும் எடுத்துரைக்கும் வண்ணம் கொண்டாடப்படுகின்றன. தமிழ் வளர்ச்சிக்குத் தனியே சங்கம் வைத்து வளர்த்த பெருமையும் இந்த நகரத்துக்கு உண்டு என்று பழமையான வரலாறுகள் தெரிவிக்கின்றன.