Monday, April 13, 2009

The Details for Udhagamandalam

Udhagamandalam (Tamil: உதகமண்டலம்):


Ooty, short for Ootacamund officially, sometimes abbreviated to Udhagai (Tamil: உதகை), is a town, a municipality and the district capital of the Nilgiris district in the South Indian state of Tamil Nadu.
Ootacamund is a popular hill station located in the Nilgiri Hills. Udhagamandalam is the older and official Tamil name for the town. Ooty stands at an approximate height of 9,080 feet (2,767 m) above sea level.


உதகமண்டலம்:

ஊட்டி என்றும், உதகை என்றும் அழைக்கப்படும் உதகமண்டலம் (ஆங்கிலம்: Udhagamandalam) தென்னிந்திய மாநிலமான தமிழத்தில் நீலகிரி மலையில் அமைந்த ஊராகும். இதுவே நீலகிரி மாவட்டத்தின் தலைநகரமுமாகும்.
இது கடல் மட்டத்திலிருந்து 7347 அடி (2239 மீ) உயரத்தில் உள்ளதால் குளுமையாக உள்ளது.

வரலாறு:

12-ஆம் நூற்றாண்டில் நீலகிரி மலையில் ஹொய்சாளர்களின் ஆட்சி புரிந்தனர். பின்னர், திப்பு சுல்தானின் மைசூர் இராஜ்ஜியத்தில் ஒரு பகுதி ஆன உதகமண்டலம் 18-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயரின் கைக்கு மாறியது.

அப்போது கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஆளுனராக இருந்த ஜான் சல்லிவன் என்பவர், இப்பகுதியின் குளுமையான தட்பவெட்ப நிலையை விரும்பி இங்கிருந்த தோடர், இரும்பா, படுகர் முதலிய பழங்குடியினரிடம் இருந்து நிலங்களை வாங்கினார்.


ஆங்கிலேயரின் ஆட்சியில் இம்மலைப் பிரதேசம் நல்ல வளர்ச்சியைக் கண்டது. வளைந்து நெளிந்து செல்லும் சாலைகளும், நீலகிரி மலை இரயில் பாதையும் அமைக்கப்பட்டது. இதன் காரணமாக உதகை, ஆங்கிலேயருக்கு கோடைக் காலத் தலைநகரமாக விளங்கியது.