Tuesday, March 24, 2009
The Details for Kodaikanal
Kodaikanal (Tamil: கோடைக்கானல்) is a city in the hills of Taluk division of Dindigul district in the state of Tamil Nadu, India. Kodaikanal is referred to as the "Princess of Hill stations" and has a long history as a retreat and popular tourist destination. It's a lot cooler in temperature than lower elevation cities such as Chennai.
கோடைக்கானல், இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தில் உள்ள ஊராகும். கோடைக்கானல் திண்டுக்கல் மாவட்டத்தில், மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது. இதனால் இங்கு நல்ல குளுமையான தட்ப வெட்பம் நிலவுகிறது. பொதுவாக இந்த மலைக்கூட்டங்களை பழனி மலைகள் என்று அழைப்பார்கள். மலைகளின் இளவரசி என்று இதனை அழைப்பவர்கள் உண்டு.
பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் செடிகள் இங்கே பரவலாக வளர்கின்றன. அதனால் இம்மலையில் உள்ள முருகன் கோவிலுக்கு குறிஞ்சி ஆண்டவர் கோயில் என்றே பெயருண்டு. கடைசியாக இந்த மலர்கள் 2006-ஆம் ஆண்டு பூத்தன.
22 சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்ட இந்த மலை வாழிடம் கடல் மட்டத்திலிருந்து 2133 மீட்டர் உயரத்தில் உள்ளது.
பயணக்குறிப்பு
கோடைக்கானல் செல்ல சென்னை-திருச்சிராப்பள்ளி-மதுரை-திருநெல்வேலி-கன்னியாகுமரி ரயில்தடத்தில் (தொடர் வண்டியில்) பயணம் செய்ய வேண்டும். திண்டுக்கல் மற்றும் மதுரைக்கு இடையில் அமைந்துள்ள கொடை ரோடு என்ற ஊரில் இறங்கி மகிழுந்து மற்றும் சிற்றுந்து மூலம் கோடைக்கானலை அடையலாம் (கொடை ரோட்டில் இருந்து 80 கிலோமீட்டர் தூரம்). அதைத்தவிர திண்டுக்கல், மதுரை, தேனி, ஒட்டன்சத்திரம் ஆகிய இடங்களில் இருந்து பேரூந்துகள் உண்டு.
மகிழுந்துவில் செல்வோர் கவனத்திற்கு. கோடைக்கானலுக்கு வத்தலக்குண்டு வழியாகவும் பழனி மலை வழியாகவும் பாச்சலூர், தாண்டிக்குடி வழியாகவும் மலைப்பாதைகள் செல்கின்றன. அவற்றுள் வத்தலக்குண்டு வழியே சிறந்தது.
அருகில் உள்ள வானூர்தி மையங்கள்
1. திண்டுக்கல் 100 கிலோமீட்டர்
2. மதுரை 135 கிலோமீட்டர்
3. கோயம்புத்தூர் 170 கிலோமீட்டர்
4. திருச்சி 195 கிலோமீட்டர்
5. சென்னை 465 கிலோமீட்டர்
கோடைக்கானல்
http://www.dindigul.tn.nic.in/kodai.htm
சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்களாவன
1. பிரையண்ட் பார்க்
2. தொலைநோக்கி காப்பகம் மற்றும் கோக்கர்ஸ் வாக்
3. தூண்பாறைகள்
4. குணா குகைகள்
5. தொப்பி தூக்கி பாறைகள்
6. மதி கெட்டான் சோலை
7. பேரிஜம் ஏரி (24 ஹெக்டேர் பரப்புள்ள பெரிய அழகான ஏரி)
8. குறிஞ்சி ஆண்டவர் கோயில்
9. செட்டியார் பூங்கா
10. படகுத்துறை
11. சில்வர் நீர்வீழ்ச்சி
Friday, March 20, 2009
The Details for Coimbatore
Coimbatore (Tamil: கோயம்புத்தூர்), also known as Kovai (Tamil: கோவை), is the second largest city in the state of Tamil Nadu. It is the administrative headquarters of Coimbatore District. Known as Manchester of southern India, it is also a part of the Kongu Nadu region of Tamil Nadu.
கோயம்புத்தூர் (Coimbatore) தமிழ்நாட்டின் பெரிய நகரங்களில் ஒன்றாகும். இதே பெயரைக் கொண்ட மாவட்டத்தின் தலைமையிடமான இது தொழில் வளர்ச்சியிலும் கல்வி நிறுவனங்களின் வளர்ச்சியிலும் மேம்பட்ட நிலையில் உள்ள நகரமாகும். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், பாரதியார் பல்கலைக் கழகம் மற்றும் அவினாசிலிங்கம் மனையியல் நிகர் பல்கலைக் கழகம் ஆகிய பல்கலைக் கழகங்களும் கோவை மாநகரை மையமாகக் கொண்டு இயங்குகின்றன
பெயர்க்காரணம்
இப்பகுதியை பண்டைக்காலத்தில் கோசர்கள் ஆண்டதால் கோசன்புத்தூர்->கோவன்புத்தூர்->கோயம்புத்தூர் ஆகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
கோயம்புத்தூர் தமிழகத்தின் மேற்குப் பகுதியில கேரள மாநிலத்தை ஒட்டி அமைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை இதன் மேற்கு எல்லையாக உள்ளது.
கோவையிலிருந்து 37 கி.மீ. தொலைவில் மரங்கள் அடர்ந்த வனப்பகுதியில், சிறுவாணி நதியில் அமைந்துள்ளது. வனப்பகுதி என்பதால் மாலை 5 மணிக்கு மேல் அனுமதிக்கப்படுவதில்லை.
அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்:
* ஊட்டி - (90 கி.மீ. வடமேற்கு): மிகப் பிரபல மலை வாசஸ்தலம். அதிக சுற்றுலாப் பயணிகள் மற்றும் மக்கள் பெருக்கத்தால் திணறினாலும் இன்றும் எல்லோரையும் ஈர்க்கிறது.
* குன்னூர்: ஊட்டி செல்லும் வழியில் உள்ள மலை வாழிடம். இங்குள்ள சிம்ஸ் பூங்கா புகழ்பெற்றது.
* முதுமலை சரணாலயம்: ஊட்டி வழியாக தமிழக எல்லையில் உள்ள பெரிய சரணாலயம் இதுவாகும்.
* மலம்புழா அணை: பாலக்காடு அருகில் உள்ளது.
* ஆனைமலை:
* பழனி - (100 கி.மீ., தெற்கு): குன்றின் மீதமைந்த முருகன் கோவில். ஆறு படை வீடுகளில் ஒன்று.
* அமராவதி அணை: முதலை பண்ணை
* திருமூர்த்தி அணை:பஞ்சலிங்கம் அருவி
* ஆழியாறு அணை: குரங்கு அருவி
* டாப் ஸ்லிப் ( இந்திரா காந்தி வன விலங்கு சரணாலயம்)
* வால்பாறை நல்ல மலை வாசஸ்தலம்

Thursday, March 12, 2009
The Details for Vellore
Vellore (Tamil: வேலூர்):
Vellore is a city and headquarters of Vellore district in the Indian state of Tamil Nadu. The 142-year old municipality was crowned as largest Corporation (area wise) in Tamilnadu on August 2008.It is considered to be one of the oldest surviving cities in South India. The city lies on the banks of the Palar river on the site of Vellore Fort.
The city lies between Chennai and Bangalore and the Temple towns of Thiruvannamalai and Tirupati.
வேலூர், இந்திய மாநிலமான தமிழகத்தைச் சேர்ந்த நகரமும், வேலூர் மாவட்டத்தின் தலைநகரும் ஆகும். பாலாற்றின் கரையில் உள்ள வேலூரின் முக்கிய இடமாக வேலூர் கோட்டை விளங்குகிறது. இக்கோட்டையின் உள்ளே இந்துக் கோயில், கிறித்தவ ஆலயம், இஸ்லாமியரின் மசூதி ஆகியவை உள்ளன.
வேலூருக்கு அருகில் இரத்தனகிரி பாலமுருகன் கோயில் உள்ளது.
வரலாறு
வேலூர் கோட்டை 16ஆம் நூற்றாண்டில் விஜயநகர ஆட்சியின் போது சின்ன பொம்மி நாயக்கரால் கட்டப்பட்டது. 17ஆம் நூற்றாண்டின் மத்தியில் பிஜாப்பூர் சுல்தான் இக்கோட்டையை கைப்பற்றினார். பின்னர் மராட்டியர்களாலும், தில்லியின் தௌத் கானாலும் கைப்பற்றப்பட்டது. இதன் பின்னர் ஆற்காடு நவாபுகளின் பொறுப்பில் இக்கோட்டை விடப்பட்டது. 1760ஆம் ஆண்டு இக்கோட்டை பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியினரின் வசம் சென்றது. திப்பு சுல்தானை வென்ற பிறகு அவருடைய மகன்களை இக்கோட்டையில் ஆங்கிலேயர் சிறை வைத்தனர். 1806 ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக இக்கோட்டையில் இந்திய சிப்பாய்கள் கலகம் நிகழ்த்தினர்.
வேலூரில் பொற்கோயில் ஒரு சுற்றுலா தலமாக உள்ளது, இக்கோயிலில் கூரை முழுவதும் தங்கத்தால் வேயபட்டுள்ளது. தினமும் ஆயிரகணக்காண சுற்றுலா பயணிகள் வந்து தரிசித்து செல்கின்றனர்.

Monday, March 2, 2009
The Details for Thanjavur
Thanjavur (Tamil: தஞ்சாவூர்)
Thanjavur is an important center of South Indian art and architecture. Most of the Great Living Chola Temples, an UNESCO World Heritage Monument are located in an around Thanjavur. The foremost among the Great Living Chola temples, the Brihadeeswara Temple, is located in the center of the town. Thanajavur is also the home of the Tanjore painting, a painting style unique to the region. The town is an important agricultural center located at the heart of the region, known as the "rice bowl of Tamil Nadu".
தஞ்சாவூர் நகரம், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தஞ்சாவூர் மாவட்டத் தலைநகரமாகும்.தஞ்சை என்றும் அழைக்கப்படுகிறது
பெயர்க்காரணம்
பெயர் வரக் காரணமாக சொல்லப்படும் புராணக்கதை. முற்காலத்தில் தஞ்சன் என்னும் அசுரன் இவ்விடத்தில் மக்களை துன்புறுத்திவந்தான். மக்களைக் காக்க அவனை சிவபெருமான் வதம் செய்த இடமாதலால் தஞ்சாவூர் என்று பெயரும், சிவபெருமான் இந்த ஊரில் தஞ்சபுரீஸ்வரர் என்ற திருப்பெயருடன் கோயில் கொண்டுள்ளார். இத்திருக்கோயில் தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில், பள்ளியக்ரஹாரத்திற்கு அருகில் இருக்கிறது. வைணவ சம்பிரதாயத்தில் இதே புராணம் சிறிது மாற்றப்பட்டு மஹாவிஷ்ணுவே தஞ்சனை அழித்தார் என்றும், அதனால் தஞ்சை மாமணி நீலமேகப்பெருமாளாய் கோயில் கொண்டு இருக்கிறார் என்று நம்பப்படுகிறது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம், மேற்கூறிய நீலமேகப்பெருமாள் கோயில் தஞ்சபுரீஸ்வரரின் கோயிலுக்கு நேரெதிரில் உள்ளது
சிறப்புகள்
தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது. சோழர்களின் தலைநகரமாய் விளங்கியது. மேலும் உலகப் புகழ் வாய்ந்த பெரிய கோவில் என அழைக்கப் படும் பெருவுடையார் கோயில் அமைந்த நகரம் தஞ்சை.
உலகப் புகழ் பெற்ற சரசுவதி மகால் நூலகத்தைத் தன்னகத்தே கொண்டது. இந்நூலகத்தில் காணக்கிடைக்காத மிக அரிய ஓலைச் சுவடிகள் நூற்றுக் கணக்கில் திரட்டப் பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
உலகில் தமிழுக்கென்று அமைக்கப்பட்ட முதல் பல்கலைக் கழகம் தஞ்சாவூரில் உள்ளது.
தஞ்சாவூர் ஓவியங்களும், கலைத்தட்டுக்களும் உலகப் புகழ் பெற்றவை. மேலும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையும் மிகவும் புகழ் பெற்றது.
கலை மற்றும் பண்பாட்டினை வளர்ப்பதற்காகவும் பாதுகாப்பதற்காகவும் நடுவண் அரசால் அமைக்கப் பட்டுள்ள தென்னகப் பண்பாட்டு மய்யம் தஞ்சாவூரில் தான் அமைந்துள்ளது. இது தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, மற்றும் கர்நாடக ஆகிய நான்கு மாநிலங்களை உள்ளடக்கிய தென்னிந்தியாவின் தலைமை மய்யமாகும்.
மெல்லிசைக் கருவிகளான வீணை, மிருதங்கம், தபேலா, தம்புரா போன்றவை இங்கு தான் செய்யப் படுகின்றன.
கலைஞர், ஜி.கே.மூப்பனார், போன்ற பெரும் அரசியல் தலைவர்கள் பிறந்த ஊர்.
Subscribe to:
Posts (Atom)