Tuesday, March 24, 2009

The Details for Kodaikanal


Kodaikanal (Tamil: கோடைக்கானல்) is a city in the hills of Taluk division of Dindigul district in the state of Tamil Nadu, India. Kodaikanal is referred to as the "Princess of Hill stations" and has a long history as a retreat and popular tourist destination. It's a lot cooler in temperature than lower elevation cities such as Chennai.

கோடைக்கானல், இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தில் உள்ள ஊராகும். கோடைக்கானல் திண்டுக்கல் மாவட்டத்தில், மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது. இதனால் இங்கு நல்ல குளுமையான தட்ப வெட்பம் நிலவுகிறது. பொதுவாக இந்த மலைக்கூட்டங்களை பழனி மலைகள் என்று அழைப்பார்கள். மலைகளின் இளவரசி என்று இதனை அழைப்பவர்கள் உண்டு.

பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் செடிகள் இங்கே பரவலாக வளர்கின்றன. அதனால் இம்மலையில் உள்ள முருகன் கோவிலுக்கு குறிஞ்சி ஆண்டவர் கோயில் என்றே பெயருண்டு. கடைசியாக இந்த மலர்கள் 2006-ஆம் ஆண்டு பூத்தன.

22 சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்ட இந்த மலை வாழிடம் கடல் மட்டத்திலிருந்து 2133 மீட்டர் உயரத்தில் உள்ளது.

பயணக்குறிப்பு

கோடைக்கானல் செல்ல சென்னை-திருச்சிராப்பள்ளி-மதுரை-திருநெல்வேலி-கன்னியாகுமரி ரயில்தடத்தில் (தொடர் வண்டியில்) பயணம் செய்ய வேண்டும். திண்டுக்கல் மற்றும் மதுரைக்கு இடையில் அமைந்துள்ள கொடை ரோடு என்ற ஊரில் இறங்கி மகிழுந்து மற்றும் சிற்றுந்து மூலம் கோடைக்கானலை அடையலாம் (கொடை ரோட்டில் இருந்து 80 கிலோமீட்டர் தூரம்). அதைத்தவிர திண்டுக்கல், மதுரை, தேனி, ஒட்டன்சத்திரம் ஆகிய இடங்களில் இருந்து பேரூந்துகள் உண்டு.

மகிழுந்துவில் செல்வோர் கவனத்திற்கு. கோடைக்கானலுக்கு வத்தலக்குண்டு வழியாகவும் பழனி மலை வழியாகவும் பாச்சலூர், தாண்டிக்குடி வழியாகவும் மலைப்பாதைகள் செல்கின்றன. அவற்றுள் வத்தலக்குண்டு வழியே சிறந்தது.

அருகில் உள்ள வானூர்தி மையங்கள்
1. திண்டுக்கல் 100 கிலோமீட்டர்
2. மதுரை 135 கிலோமீட்டர்
3. கோயம்புத்தூர் 170 கிலோமீட்டர்
4. திருச்சி 195 கிலோமீட்டர்
5. சென்னை 465 கிலோமீட்டர்
கோடைக்கானல்

http://www.dindigul.tn.nic.in/kodai.htm

சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்களாவன

1. பிரையண்ட் பார்க்
2. தொலைநோக்கி காப்பகம் மற்றும் கோக்கர்ஸ் வாக்
3. தூண்பாறைகள்
4. குணா குகைகள்
5. தொப்பி தூக்கி பாறைகள்
6. மதி கெட்டான் சோலை
7. பேரிஜம் ஏரி (24 ஹெக்டேர் பரப்புள்ள பெரிய அழகான ஏரி)
8. குறிஞ்சி ஆண்டவர் கோயில்
9. செட்டியார் பூங்கா
10. படகுத்துறை
11. சில்வர் நீர்வீழ்ச்சி

No comments: