Sunday, May 16, 2010

The Details for Nagapattinam


Nagapattinam (Tamil: நாகப்பட்டினம்):

Nagapattinam District is a coastal district of Tamil Nadu state in southern India. The town of Nagapattinam is the district headquarters.


நாகப்பட்டினம் மாவட்டம் தமிழத்தின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள ஒரு மாவட்டம். 1991-ஆம் ஆண்டு அக்டோபர் 18-ஆம் திகதி தஞ்சாவூர் மாவட்டத்தின் கிழக்குப் பகுதிகள் பிரிக்கப்பட்டு இம்மாவட்டம் உருவாக்கப்பட்டது.

தமிழ்நாட்டின் சமூக நல்லிணக்க மாவட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. இம்மாவட்டத்தில் இஸ்லாமியர்களுடைய பிரசித்தி பெற்ற நாகூர் மற்றும் பாப்பாவூர் தர்காவும், கிருஸ்த்துவர்களுடைய பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி மாதா கோவிலும் உள்ளது. பிரசித்தி பெற்ற சப்த விதாங்கர் கோயில், நீலாயதாட்சி சமேதா காயாரோகண சுவாமி கோயில், சிக்கல் சிங்காரவேலர் கோவிலும், எட்டுக்குடி முருகன் கோவிலும் இம்மாவட்டத்தில் தான் உள்ளது. இந்த புண்ணிய தலங்களுக்கு அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

வரலாறு
நாகப்பட்டினம் ஒரு வரலாற்றுச் சிறப்புக்கொண்ட இடமாகும். பண்டைத் தமிழ் நாடுகளில் ஒன்றான சோழ நாட்டில் ஒரு பகுதியாகிய நாகப்பட்டினம், முற்காலச் சோழர் காலத்திலேயே ஒரு முக்கிய துறைமுக நகராக விளங்கியது. பிற்காலத்தில், இராஜராஜ சோழனின் விருதுப்பெயர்களில் ஒன்றான சத்திரிய சிகாமணி என்னும் பெயரில் அமைந்த பகுதியின் தலைமை இடமாகவும் இது விளங்கியது. நாகபட்டினம் முற்காலத்தில் சோழகுலவல்லிப் பட்டினம் என்றும் அழைக்கப்பட்டது. கி.மு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த பர்மா நாட்டு வரலாற்று நூலொன்றில் நாகபட்டினம் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. இதே நூலில், அசோகப் பேரரசன் கட்டிய புத்த விகாரம் ஒன்று இங்கே இருந்தது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. சீனப் பயணியான ஹியுவென் சாங் (Hiuen Tsang) என்பவனும் தனது நூலில் இங்கிருந்த புத்த விகாரம் பற்றிக் குறிப்பிட்டுள்ளான். பண்டைய புத்த இலக்கியங்களில், நாகபட்டினம், படரிதித்த என்ற பெயரிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று நாகபட்டினத்தின் ஒரு பகுதியின் பெயரான அவுரித்திடல், படரிதித்த என்பதன் திரிபாக இருக்கலாமென ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். படரிதித்த என்பது இப் பகுதியில் அதிகமாகக் காணப்படும் ஒரு பழமரம் ஆகும்.

நாகப்பட்டினம் சோழப் பேரரசின் பழமைவாய்ந்த துறைமுக நகரங்களுள் ஒன்று. இது "நாவல் பட்டிணம்" - கப்பல்களின் நகரம் என்றும் அழைக்கப்பட்டது.
இம்மாவட்டத்தில் அமைந்துள்ள காவிரிப்பூம்பட்டிணம் என்று இலக்கியப் புகழ்பெற்ற பூம்புகார் சோழர்களின் துறைமுக நகரமாய் விளங்கியது.

* நாகப்பட்டினம்
* மயிலாடுதுறை
* சீர்காழி
* வேதாரண்யம்

No comments: